நீங்கள் எதை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள் பெண்களே.. காயத்ரி ரகுராமின் சர்ச்சை ட்வீட்!!

1028

காயத்ரி ரகுராமின் சர்ச்சை ட்வீட்

சபரிமலை செல்ல வேண்டும் என பெண்கள் ஏன் அடம்பிடிக்க வேண்டும் நடிகை காயத்ரி ரகுராம் செய்துள்ள ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, பெண்கள் அங்கு செல்ல முயன்ற போது ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

இதனால் சன்னிதானம் செல்ல நினைக்கும் பெண் பக்தர்கள் பம்பை நதிக்கரையுடன் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் இவ்விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘ஐயப்பன் மீதும், சபரிமலை கோயில் நடைமுறைகள் மீதும் நம்பிக்கையில்லாத பெண்கள் அங்கு ஏன் செல்ல வேண்டும். அரசியல் காரணத்திற்காக அடம்பிடித்து அங்கு சென்று திரும்புகிறீர்கள். நீங்கள் எதை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள் பெண்களே.

உங்களுக்கு ஐயப்பன் மீது நம்பிக்கை இருந்தால், பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருவது போல், 40 வயது கடந்த பிறகு அங்கு செல்ல வேண்டியது தானே’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராமின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கருத்துக்கு ஆதரவும், பலர் எதிராகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.