
பிரித்தானியாவின் ப ரபரப்பான சாலை ஒன்றில் ஒரு பொம்மைக்காரில் மூன்று வயது சிறுவன் ஒருவன் பயணிக்க, தனது வேனை சாலையின் குறுக்கே நிறுத்தி அந்த சிறுவனைக் கா ப்பாற்றினார் ஒரு பெண்.
Spalding மற்றும் Bourne நகரங்களை இணைக்கும் ப ரபரப்பான சாலையில், சிறுவன் ஒருவன் தனது பொம்மைக்காரில் பயணிக்க, அவனுக்கு பின்னால் வந்த வாகனங்கள் வேகத்தைக் குறைத்துள்ளன.
ஆனால் பொ றுமையிழந்த வாகன சாரதி ஒருவர் நின்றுகொண்டிருந்த வாகனங்களை முந்திக்கொண்டு வர, அதை கவனித்த ஒரு பெண், சமயோகிதமாக தனது வேனை சாலையின் குறுக்கே கொண்டு நிறுத்தினார்.

வாகனங்கள் நிற்க, வேனிலிருந்து இறங்கிய அந்த பெண், சிறுவனை தூக்கி அணைத்துக்கொள்ள, இதைப் பார்த்துக்கொண்டிருந்த அருகிலுள்ள வீடு ஒன்றிலிருந்த ஒரு பெண் தன்னுடைய வீட்டுக்கு சிறுவனை அழைத்துக்கொண்டதோடு, அவன் யார் எங்கிருந்து வந்தான் என விசாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அத்துடன், பொலிசாரையும் அந்த பெண் அழைத்துள்ளார்.
அதற்குள், அங்கிருந்தவர்கள் வீடு வீடாக சென்று அந்த சிறுவனின் பெற்றோரை தேடும் முயற்சியில் இறங்க, தகவல் அறிந்து Lincolnshireஇல் வாழும் அந்த சிறுவனின் தாய் அங்கு ஓடி வந்திருக்கிறார்.
அதற்கு பிறகுதான் நடந்த விடயம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது. Stefan Snowden என்னும் அந்த மூன்று வயது சிறுவனின் தந்தையான Marcக்கு திடீரென வ லிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனே தந்தைக்கு உதவ யாரையாவது அழைப்பதற்காக, அவன் தனது காரை (பொம்மைக்காரை) எடுத்துக்கொண்டு கிளம்பியிருக்கிறான்.
கிட்டத்தட்ட, 1000 அடி தூரம் அவன் தனது பொம்மைக்காரில் பயணித்துள்ளான். இந்த தகவல் அறிந்ததும் அனைவரும் நெகிழ்ந்துபோய் Stefanஐ பாராட்டியுள்ளார்கள்.
அத்துடன் தகவல் அறிந்து வந்த பொலிசார், தனது உ யிரையும் பொருட்படுத்தாமல், அந்த ப ரபரப்பான சாலையின் குறுக்கே தனது வேனை நிறுத்தி குழந்தையை கா ப்பாற்றிய பெண்ணையும், யாரென்றே தெரியாத குழந்தையை தன் வீட்டுக்குள் ஏற்றுக்கொண்டு, அதன் தாய் வரும் வரை அவனை நன்றாக கவனித்துக்கொண்ட பெண்ணையும் மனதார பாராட்டியுள்ளார்கள்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Marc நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், தங்கள் மகனை கா ப்பாற்றிய பெண்கள் இருவருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.