பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சாமியார் : தன்னை நாடிவரும் குடும்பத்தை ஏமாற்றியது அம்பலம்!!

499

பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய சாமியார்

தமிழகத்தில் பில்லி, சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாக, மந்திரவாதி என்று கூறி பல பெண்களை சீரழித்த போலி சாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி என்கிற செல்வமணி. 40 வயதாகும் இவருக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம் பேடு ஆகும். இவருக்கு திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போது தான் ஒரு சாமியார் என்றும், மாந்திரீகம் செய்து, பில்லி-சூனியம் போன்றவைகளை நீக்கி தருவதாகவும் அங்கிருப்பவர்களிடம் கூறி வந்துள்ளார். இதற்காக நீண்ட தாடி, ஜடா முடியுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாதிரி, ராயநல்லூர், காட்ராம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வலம் வந்தார்.

மேலும் மக்களை கவரும் வகையில் ஆன்மிகம் குறித்தும் பேசி வந்துள்ளார். இதனால் பல பெண்கள் அவரை நம்பி பில்லி, சூனியத்தை நீக்கி தருமாறு கூறி சென்றுள்ளார். அப்படி தன்னிடம் வரும் பல பெண்களை கவர்ந்து, அவர்களை கணவரிடம் இருந்து பிரித்து சென்று தன்வசமாக்கி குடும்பம் நடத்தி வந்ததாகவும், சிறிது நாட்களுக்கு பிறகு அந்த பெண்களை ஏமாற்றி விட்டு, வேறு பெண்களை தேடி சென்றுவிடுவார்.

தற்போது மதுரையை சேர்ந்த ஹேமா (40) என்ற பெண்ணுடன் இவர் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மணியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது அவர் தன்னுடைய மகனின் வாழ்க்கையில் மிகப் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும் என்று கேட்க, உடனே மணி அவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று, அவர்களின் பிரச்சனையை கேட்டறிந்துள்ளார்.

அதில் அவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருப்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அந்த பெண்ணை அடைவதற்காக, உங்கள் ஊரில் ஒரு கோவில் கட்டினால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும், ஆனால் கோவில் கட்டும் போது உங்களது மகள் வீட்டில் இருந்தால் அவளுக்கு ஆகாது, ஆகையால் அவள் என்னுடைய பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன் படி அவரின் பேச்சை நம்பி அனுப்பி வைத்துள்ளனர். பல மாதங்களாக தன்னுடன் இருந்த, அந்த இளம்பெண்ணுக்கு 19-வது வயது பிறந்தவுடன், அவரது பெற்றோரை சந்தித்து, உங்களது மகளை நான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன், ஆகையால் எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதற்கு மறுத்துள்ளனர். என்னுடைய ஆசைக்கு சம்மதிக்கவில்லை என்றால், உனது அண்ணனின் பிரச்சனை தீராது என்று கூறி, அந்த பெண்ணை வீட்டில் வைத்து கற்பழித்துள்ளார். அவர் உடனடியாக தனது தந்தையிடம் தெரிவிக்க, அவர்கள் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மணி சாமியார் போர்வை பல பெண்களை சீரழித்திருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி அவருக்கு உடந்தையாக இருந்த ஹெமா என்ற பெண் மதுரையைச் சேர்ந்தவர் எனவும், அவரை கணவரிடமிருந்து பிரித்து தன்வசப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.