பலாத்காரம் என்றால் என்னப்பா! பயமாக இருக்கிறது- பிரபல வீரர் வேதனை!

902

இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், பலாத்காரம் பற்றி தன் மகள் கேட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார் பிரபல வீரர் கவுதம் கம்பீர்.

இதுதொடர்பாக ஆங்கில நாளேடுக்கு எழுதியுள்ள கட்டுரையில்,பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருவதை பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது.இதை பார்த்து என் மகள் என்னவென்று கேட்டுவிடுவாளோ என அஞ்சுகிறேன்.

இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக நான் வேதனைப்படுகிறேன்.என் குழந்தைகளுக்கு Good Touch, Bad Touch பற்றி சொல்லித்தரவில்லை என வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன்.

இந்த கட்டுரையை எழுதும் முன் நான் படித்த நிகழ்வுகள் எலும்பில் ரத்தம் உறையும் அளவுக்கு எனக்கு நடுக்கத்தை கொடுத்தது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின்படி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 336 சதவிகிதம் அதிகரித்துள்ளது.இது வெட்கக்கேடு, இக்குற்றத்தை செய்பவர்கள் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்தாலும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் ஐபிஎல் போட்டிகளில் அரைகுறை ஆடையுடன் சியர் லீடர்ஸ் ஆடுவது அவசியமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.