பழத்தை திருடியவரை மரத்தில் கட்டி வைத்து உதைத்த பொது மக்கள் – என்ன பழம் தெரியுமா?

568

உத்தரப்பிரதேசத்தில் முலாம் பழத்தை திருடியவரை, மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் முலாம் பழத்தை திருடியதாக வாலிபர் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து சராமாரியாக அடித்து உதைக்கப்பட்டார்.

இதை அங்கிருந்த மற்றொரு நபர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வீடியோவில் வைத்த காட்சிகளின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதியளித்தனர்.