பாடசாலை மாணவியை ஆபாச வீடியோ காட்டி மிரட்டிய இளைஞர் : பேஸ்புக் நட்பால் விபரீதம்!!

584

சென்னையில் பாடசாலை மாணவியிடம் ஆபாச வீடியோ காட்டி அவரிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண், அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவருகிறார்.

அவரிடம் பேஸ்புக் மூலம் விக்னேஷ் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், கடந்த 15-ம் திகதி மாணவியின் குடியிருப்பில் எவரும் இல்லாத நிலையில் அங்கு சென்ற விக்னேஷ் மாணவியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.

மட்டுமின்றி அச்சம்பவத்தை மாணவிக்குத் தெரியாமல் விக்னேஷ், தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

அடுத்த நாள் குறிப்பிட்ட மாணவியிடம் அந்த வீடியோவை விக்னேஷ் காண்பித்துள்ளார். மட்டுமின்றி அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க தமக்கு 5,00,000 ரூபாய் வேண்டும் என்றும் மாணவியை விக்னேஷ் மிரட்டியுள்ளார்.

விக்னேஷின் மிரட்டல் எல்லைமீறியதை அடுத்து வேறுவழியின்றி நடந்த சம்பவத்தை மாணவி, தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி தரப்பில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் விக்னேஷை காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்துள்ளனர்.

அதில் நடந்தவற்றை விக்னேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் குறித்த மாணவிக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.