பிக்பாஸ் பிரபலத்திற்காக மக்களிடம் ஓட்டு கேட்டும் குடும்பத்தினர்!!

884

பிக்பாஸ்

‘பிக் பாஸ்’ விஜயலட்சுமிக்கு வாக்கு கேட்டு, அவருடைய தரப்பினர் ட்வீட் செய்துள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி, இந்த வார இறுதியுடன் முடிவடைகிறது.

ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகிய நான்கு பேரும் இறுதிப் போட்டியாளர்களாகக் களத்தில் உள்ளனர். இவர்களில் ஒருவருக்குத்தான் ‘பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர்’ என்ற பட்டம் கிடைக்கப் போகிறது.

போட்டியில் கலந்துகொண்ட அனந்த் வைத்யநாதன், மமதி சாரி, நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத், டேனியல், யாஷிகா ஆனந்த், சென்றாயன், பாலாஜி, மும்தாஜ் ஆகிய 11 பேரும், போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

இது இறுதி வாரம் என்பதால், பரபரப்பு அதிகமாகக் காணப்படுகிறது. இறுதிப் போட்டியாளர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும், அவர்களுக்கு வாக்கு கேட்டு ரசிகர்களிடையே ஆதரவைச் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜயலட்சுமி தரப்பினர், விஜயலட்சுமியின் ட்விட்டர் பக்கத்திலேயே அவருக்கு வாக்கு கேட்டு ட்வீட் செய்துள்ளனர்.“விஜயலட்சுமிக்கு வாக்களித்து, அவரை இறுதிப்போட்டிக்குள் நுழையச் செய்ததற்கு நன்றி. அவர் வைல்ட் கார்ட் மூலமாக நுழைந்ததற்காக நீங்கள் எத்தனை பேர், எவ்வளவு விமர்சனம் செய்தீர்கள்.

இன்று நாங்கள் பெருமகிழ்ச்சியில் இருக்கிறோம். விஜி உங்கள் அனைவரையும் விரும்புகிறார். இன்றிரவு வாக்களிப்பு தொடங்குகிறது. இதுதான் கடைசி வாரம். தயவுசெய்து விஜயலட்சுமிக்கு வாக்களியுங்கள்” என அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது.