பிக்பாஸ் வீட்டில் மும்தாஜை Under wear துவைக்கச் சொன்ன பிரபலம்: வெளியில் வந்த மம்மதி வேதனை

970

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய்டிவியில் பிக்பாஸ் பாஸ் 2 நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் சுற்றில் மம்மதி வெளியேறினார்.பிக்பாஸ் வீட்டில் மம்மதியும், நடிகை மும்தாஜும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். மம்மதி வெளியேறிவுடன் மும்தாஜ் பிக்பாஸ் வீட்டில் கண்கலங்கினார்.

இந்நிலையில் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மம்மதி பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பிக்பாஸ் வீட்டில் நடந்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார்.

குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் இருந்த போது ஒரு குறிப்பிட்ட டாஸ்கின் போது பெண்கள் எல்லாம் நாங்கள் எல்லோரும் அவர்களுக்கு ஒரு வேலையாட்கள் போன்று வேலை செய்தோம்.

அப்போது சென்ட்ராயன் தன்னுடைய அழுக்கு உள் ஆடையை மும்தாஜிடம் துவைக்க கொடுத்தார். அதை தட்டிக் கொடுத்து அனுப்பியது ஷாரிக் மற்றும் மகத்.

பொன்னம்பலம், ஆன்ந்த் மற்றும் பாலாஜியைத் தவிர மற்ற அனைவரும் அவர்களின் உள்ளாடைகளை(Under wear) துவைக்க கொடுத்தனர். எல்லையை மீறி நடந்து கொண்டனர் என்று வேதனையாக கூறியுள்ளார்.