பிரபல நடிகை கணவரால் சுட்டுக்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்

804

பிரபல நடிகையும், பாடகியுமான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.பாகிஸ்தான் நடிகையான ரேஷ்மா கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள நவ்ஷேரா கலன் பகுதியில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ரேஷ்மாவுக்கும் இவரது கணவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுக் கொன்று விட்டு கணவன் தப்பி விட்டதாகவும், ரேஷ்மா இவருக்கு நான்காவது மனைவி என்றும் பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.