பிரபல முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி- என்ன படம்?

601

ஆர்யாவை வைத்து நடந்த எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி ரசிகர்களிடம் பிரபலம். இதில் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் அபர்ணதி.

வசந்தபாலன் இயக்க இருக்கும் புதிய படத்தில் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக கமிட்டாகியுள்ளார். நாளையில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கும் நிலையில் நாயகி பற்றி தகவல் வந்துள்ளது.

அதாவது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி தான் இப்பட நாயகியாம். மேலும் ராதிகா சரத்குமார், பாண்டி, பிரபாகர் போன்ற பிரபலங்களும் படத்தில் நடிக்க இருக்கிறார்களாம்.