பிரித்தானியாவில் காதலருடன் நடிகை ஸ்ருதிஹாசன் கொண்டாட்டம் : வைரலாகும் புகைப்படங்கள்!!

733

நடிகை ஸ்ருதிஹாசன்

பிரித்தானியாவில் உள்ள தனது காதலருடன் நடிகை ஸ்ருதிஹாசன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன், பிரித்தானிய நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலித்து வருகிறார். இதையடுத்து மைக்கேலை சந்திப்பதற்காக அடிக்கடி பிரித்தானியாவுக்கு செல்வதை வழக்காக கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் சமீபத்தில் மைக்கேலுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை அவர் கொண்டாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதிஹாசன் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.