பிரேக் பிடிக்காததால் வேகமாக பின்னோக்கி ஓடிய பயணிகள் ரயில்! மண்கொட்டி தவிர்க்கப்பட்ட பயங்கர விபத்து: திகிலூட்டும் வீடியோ காட்சி!!

368

இந்தியா…………

இந்தியாவில் பயணிகள் ரயில் பல கிலோ மீட்டர் தூரம் பிரேக் பிடிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து வேகமான பின்னோக்கி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தனக்பூருக்கு கொண்டிருந்த Purnagiri Janshatabdi, திடீரென பல கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடியது. சம்பவத்தின் போது ரயில் 64 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது, முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த தகவலின் படி, தனக்பூர் தடத்தில் மாடு ஒன்று ரயில் அடிப்பட்ட இறந்துள்ளது. இதைதொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், திடீரென ரயில் பின்னோக்கி ஓட தொடங்கியுள்ளது, ரயிலை நிறுத்த ஓட்டுநர் மேற்கொண்ட முயற்சி எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை.

பிரஷர் பைப்பில் கசிவு ஏற்பட்டதால் ரயிலின் பிரேக்குகள் செயலிழந்துவிட்டன என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.லோகோ பைலட் மற்றும் காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தம் சிங் நகர் மாவட்டத்தின் காதிமா பகுதிக்கு அருகே தண்டவாளத்தில் மண் மற்றும் கலவைகளை கொட்டி ரயில் நிறுத்தப்பட்டது. பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது.

இதில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.