லக்னோ……
உத்தரப்பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள சிவில் லைன்ஸ் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சனிக்கிழமையன்று 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது 30 வயது காதலனின் பிறப்புறுப்பை வெட்டியதாகக் கூறப்படுகிறது. காதலனைத் தன்னை பிளாக்மெயில் செய்து வந்ததாகவும் இதனால் வேறுவழியின்றி இதைச் செய்ததாகவும் அந்த ஆண் கூறியுள்ளார்.
அவர்கள் இருவருமே பரேலி முனிசிபல் கார்ப்பரேஷனில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக பிறப்பு உறுப்பை வெட்டிய ஆணை கைது செய்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இருவருக்கும் இடையே கடந்த ஓராண்டாகத் தான் பழக்கம் இருந்து வந்துள்ளது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
அங்குத் தனிமையில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அதை ஒரு இளைஞர் வீடியோ எடுத்து வைத்துள்ளான். அதன் பின்னர் அந்த வீடியோவை காட்டி, பிளாக் மெயில் செய்யத் தொடங்கியுள்ளான். வீடியோவை இணையத்தில் லீக் செய்து விடுவேன் என்று மிரட்டி, அந்த இளைஞரிடம் இருந்து பல முறை பணமும் பெற்றதாகக் கூறப்படுகிறது.
கடந்த சனிக்கிழமை இருவரும் அந்த ஹோட்டலில் சந்தித்து உள்ளனர். அப்போது அந்தரங்க வீடியோவை டெலிட் செய்யும்படி அந்த இளைஞரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர் இதைக் கண்டுகொள்ளவில்லை. அப்போது இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மிக விரைவிலேயே கையை மீறிச் சென்றுள்ளது.
வீடியோ எடுத்த அந்த ஆண் டெலிட் செய்ய கேட்ட அந்த ஆணை தாக்கத் தொடங்கி உள்ளார். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாத அந்த நபர், அங்கிருந்த ஒரு கூர்மையான பொருளை எடுத்து இளைஞரின் அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார். இருப்பினும், இது தொடர்பாக இரு ஆண்களும் புகார் அளிக்கவில்லை. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று போலீசார் குறிப்பிட்டு உள்ளனர்.
இது தொடர்பாகக் காவலர் ஒருவர் கூறுகையில், “இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறோம். ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து முதற்கட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளோம். யாரும் புகார் தரவில்லை என்றாலும் கூட விரைவில் இந்தச் சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த இளைஞரின் உடல்நிலை திடீரென மோசமடைந்து உள்ளது. இதையடுத்து அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த இளைஞரின் உடல்நிலை சற்று மேம்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.