அவுஸ்திரேலியாவில் புதிய இன நச்சு தன்மை கொண்ட பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எனினும் இப் பாம்பு இனம் அழிவடையும் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே இப் பாம்பினை கண்டுபிடித்துள்ளனர்.இப்பாம்பானது கறுப்பு மற்றும் வெள்ளை நிற வரியமைப்பை கொண்ட உடலமைப்பினைக் கொண்டதாக இருக்கின்றது.
மேலும் இவ் இனத்திற்கு Vermicella parscauda எனப் பெயரிடப்பட்டுள்ளது.தவிர குறித்த பாம்பு தோற்றம் பெற்ற இடம் தொடர்பாக தகவல்களை கண்டுபிடிப்பதற்கு தொடர்ந்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.