புதுப்பெண்ணை பு தைக்க கணவர் வீட்டு வாசலில் தோண்டப்பட்ட பெரிய குழி : அதன்பின்னர் நடந்த எதிர்பாராத சம்பவம்!!

479

எதிர்பாராத சம்பவம்

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் த ற்கொ லை செய்த நிலையில் அவரை பு தைக்க கணவர் வீட்டு வாசலில் பெரிய குழி தோண்டப்பட்டதால் ப ரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவருக்கும் புவனேஸ்வரி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கருத்து வே றுபாடு காரணமாக நவீன்குமார், புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ம னவேதனை அடைந்த புவனேஸ்வரி கடந்த 18ம் திகதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்கு ளித்தார்.

பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இதனால் ஆ த்திரமடைந்த அவருடைய உறவினர்கள் நேற்று நவீன்குமாரின் வீட்டு வாசலில் புவனேஸ்வரியின் உ டலை பு தைக்க அதிரடியாக முடிவு செய்தனர்.

அதன்படி வீடு முன்பு திரண்ட உறவினர்கள் அங்கு எந்திரம் மூலம் பெரியளவில் பள்ளம் தோண்டி புவனேஸ்வரி ச டலத்தை பு தைக்க தயாரானார்கள். அப்போது வீட்டில் இருந்த பொருட்களை புவனேஸ்வரியின் உறவினர்கள் சே தப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உறவினர்களை சமாதானம் செய்து வீட்டு வாசலில் உ டலை பு தைக்கும் முடிவை கைவிட வைத்தனர்.

ஆனால் பின்னர் நேற்று மாலை நவீன்குமார் தோட்டத்தில் புவனேஸ்வரி உ டல் பு தைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் புவனேஸ்வரி த ற்கொ லை தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.