பெண் ஊழியரை கொடூரமாக கொலை செய்த காதலன் : அதிர்ச்சி தரும் பின்னணி!!

566

தமிழகத்தில் அங்கன் வாடி பெண் ஊழியரை கள்ளக்காதலன் கல்லால் அடித்து கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் அருகே உள்ள குரிசிலாபட்டு ரெட்டிவலசை கிராமத்தை சேர்ந்தவர் பசுபதி. இவருக்கு சுதா(32) என்ற மனைவியும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பசுபதி இறந்துவிட்டதால், சுதா தன் மகளுடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து இன்று சுதா அங்கிருக்கும் பாம்பாறு ஆற்றில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அருகிலிருக்கும் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் கணவர் இறந்த பிறகு சுதா அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் சதீஷ் (32) என்பவருடன் பழகி வந்துள்ளார். அதன் பின் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் பொலிசார் சதீஷை பிடித்து கிடுக்கு பிடி விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது கணவனை இழந்து தனிமையில் இருந்த சுதாவுக்கும் சதீசுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியது. சதீஷ் சுதாவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சுதாவின் வீட்டுக்கு சதீஷ் சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவர் வேகமாக வெளியேறி சென்றுள்ளார். அவர் யார் என்பது குறித்து சதீஷ் கேட்டதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

சுதாவின் நடத்தையில் சதீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நேற்று இரவு சுதாவை அவரது மோட்டார் சைக்கிளில் பாம்பாற்றுக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து இருவரும் மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுதாவின் தலையில் கல்லை போட்டு சதீஷ் கொலை செய்துள்ளார்.

அவரது உடலை ஆற்றில் உள்ள பள்ளத்தில் தூக்கிபோட்டு விட்டு சேலையால் உடலை மூடிய சதீஷ் அங்கிருந்து புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை அருகில் உள்ள கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிட்டு சதீஷ் வீட்டுக்கு சென்று எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டார்.

இந்த தகவல்களை சேகரித்த பொலிசார் அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்