பெண் தவளைகளை கவர ஆண் தவளை நிற மாற்றம்.. பலரை ஆச்சர்யபடுத்திய வைரல் காணொளி!

455

ஆண் தவளைகள்…….

பெண் தவளைகளை கவர்வதற்காக ஆண் தவளைகள் நிறம் மாறும் வீடியோ காட்சி ஒன்று ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.

குறிப்பிட்ட வீடியோ காட்சியானது வனத்துறை அதிகாரியான பர்வீஸ் கஸ்வான் என்பவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், மழைக்காலம் என்பதால் பெண் தவளைகளை கவர்வதற்காக ஆண் தவளைகள் மஞ்சள் நிறம் மாறி இருக்கின்றன.

இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் இது போல அதிக மஞ்சள் நிற தவளைகள் காணப்படுகின்றன. இதோ இந்த வீடியோ…