பெண்கள் பள்ளியில் புகுந்து இளைஞர்கள் செய்த கொடூரம் : 34 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!!

727

இளைஞர்கள் செய்த கொடூரம்

பீகார் மாநிலத்தில் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞர்களை திட்டியதால், அத்துமீறி பள்ளியில் புகுந்த பட்டாளம் ஆசிரியைகள், மாணவிகளை கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம், திரிவேணிகஞ்ச் பகுதி அருகே விடுதியுடன் கூடிய கஸ்தூபா காந்தி பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 12 முதல் 15 வயதுள்ள மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளிக்கு செல்லும் மாணவிகளிடம், மாடியிலிருந்து ஆபாசமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் எரிச்சலடைந்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் மோகன் என்ற இளைஞர் பள்ளி சுவற்றில் ஆபாசமான வார்த்தைகளை எழுதியுள்ளனர். இதனை பாத்து ஆத்திரமடைந்த மாணவிகள் அந்த இளைஞரை திட்டி அனுப்பியுள்ளனர்.

வேகமாக வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் தன்னுடைய அம்மா மற்றும் ஏராளமானோரை அழைத்து வந்துள்ளான். பள்ளியில் அத்துமீறிய அந்த கும்பல், ஆசிரியை மற்றும் மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். சத்தம் கேட்டு வந்து பார்த்த பக்கத்து வீட்டார் ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனால் 3 மணி நேரம் கழித்து தாமதமாக வந்த பொலிஸார் காயமடைந்த 34 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையில், இதுவரை 8 பேர் மீது மட்டுமே பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என தகவல் கொடுத்த பக்கத்து வீட்டார் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவமானது மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தப்பட்டவர்களை கடுமையாக தாக்கி பேசியதோடு, முதலமைச்சர் நிதிஷ்குமார் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.