பூசாரி

தமிழகத்தில் திருமணமான ஒரு பெண்ணுக்கு நாகப்பாம்பு பிறக்கும் என பூசாரி சொன்னதை நம்பி நுாற்றுக்கணக்கான மக்கள் திரண்ட நிலையில் அவர் கர்ப்பமே ஆகவில்லை என தெரியவந்துள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்தவர் கோகிலா (42). இவருக்கும் நடராஜன் (45) என்பவருக்கும் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத நிலையில் குழந்தை இல்லை.

பக்கத்து கிராமமான வேங்காம்பட்டியில், பூசாரி ஒருவரிடம், சில மாதங்களுக்கு முன் தம்பதி வாக்கு கேட்டனர். பூசாரி, கோகிலா வயிற்றில், நாகப் பாம்பு வடிவில் குழந்தை உள்ளது. வரும் பவுர்ணமி அதிகாலை, 12.20 மணிக்கு, இவர் வயிற்றில் நாகப் பாம்பு பிறக்கப் போகிறது என ஆரூடம் கூறியுள்ளார். இதையடுத்து தான் கர்ப்பமாக இருப்பதாக கோகிலா நம்பியுள்ளார்.
பூசாரி சொன்ன ஆரூடம், அப்பகுதியில் காட்டுத் தீயாக பரவியது. பவுர்ணமியான, 25ம் திகதி இரவு 10:00 மணிக்கு, கோகிலா வீட்டு முன் ஏராளமானோர் திரண்டனர். பூசாரி குறிப்பிட்ட 12:20 மணியாகியும், கோகிலாவிடம் எந்த மாற்றமும் இல்லை. இதனால், திரண்டிருந்த மக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
பொலிசார் ஆம்புலன்ஸ் வரவழைத்து, கோகிலாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாகவே இல்லை என்பதை உறுதி செய்தனர். இதனால் கோகிலாவும், நடராஜனும் ஏமாற்றமடைந்தனர்.