பெண்ணை காரின் கூரை மீது கட்டிவைத்து சென்ற பொலிசார் : திடுக்கிடும் சம்பவம்!!

938

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பொலிசார், பெண்ணொருவரை காரின் கூரை மீது கட்டிவைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள சவிந்தா தேவி எனும் கிராமத்தில், சொத்து தகராறு தொடர்பாக புகார் ஒன்று பொலிசாரிடம் கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, புகார் கொடுக்கப்பட்ட நபரைத் தேடி பொலிசார் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு குறித்த நபர் இல்லாததால் பொலிசார் வீட்டில் இருந்து பெண்களிடம் தவறாக பேசியதாக கூறப்படுகிறது.

அப்போது பொலிசாரை எதிர்த்து புகார் கொடுக்கப்பட்ட நபரின் மருமகள் கேள்வி கேட்டதால் பொலிசாரால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அப்பெண்ணை தங்களது காரின் கூரை மீது கட்டிவைத்த பொலிசார், காரிலேயே கிராமத்தை சுற்றி வந்துள்ளனர்.

பயத்தால் குறித்த அலறியுள்ளார். ஆனால் பொலிசார் அதனை கண்டுகொள்ளாமல் காரை ஓட்டியுள்ளனர். கிராம மக்களும் பொலிசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடும் காரில் இருந்து கீழே விழுந்து தப்பித்து ஓடியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.