பெற்றோர் கஞ்சா புகைத்ததன் மூலமும் பலவிதமான போதைப் பொருட்கள் உபயோகித்ததன் மூலம் அவர்களது 10 மாத பெண் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் உள்ள ஆர்மண்ட்-ட்ரொஸ்சௌஸ் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அங்கு அனுமதிக்கப்பட்ட 10 மாத பெண் குழந்தை ஒன்றிற்கு கஞ்சா போன்ற பலவகையான போதைப் பொருட்களால் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அக்குழந்தையின் பரிசோதனை முடிவுகளின் மூலம் அவளது உடலில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரான்சின் சிறுவர் பாதுகாப்பு படையினரால் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் குழந்தையின் பெற்றோர்கள், போதைப்பொருள் வாடிக்கையாளர்களாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர், ஆனால் அவர்களது குழந்தையின் உடலில் எப்படி போதைப் பொருள் இருந்தது என்பது அவர்களுக்கு புரியவில்லை என்று விளக்கமளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் இரண்டு மற்றும் நான்கு வயதிற்குட்பட்ட இரண்டு மூத்த சகோதரர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள், அவர்கள் உடலில் “மிதமான” கஞ்சா மற்றும் கோகோயின் மற்றும் எக்ஸ்டஸி ஆகியவை இருந்ததாக தெரியவந்துள்ளது
கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்ட பெற்றோர் போதை மருந்துக்கென பணத்தை ஒதுக்கி வைத்து செலவழிக்கும் வழக்கம் உடையவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இவர்கள் மீது குழந்தைகளை புறக்கணிக்கும் பெற்றோர் போதைப் பொருள் பழக்கம் மற்றும் சிறுவர்களை தெரிந்தே ஆபத்தில் சிக்க வைத்த பெற்றோர் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறும் எனத் தெரியவந்துள்ளது