பெற்றோர் பெருமைப்படுகின்றனர் : வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளையடித்த ஸ்விக்கி பெண்!!

530

ஸ்விக்கி பெண்

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய வயதைப் பற்றி எல்லாம் கவலைப்படமால், ஸ்விக்கியில் வேலைக்கு சேர்ந்து, அதில் அதிக ஓர்டர் எடுத்த பெண் ஊழியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கேரளாவின் கொச்சியை சேர்ந்தவர் சுதா. பி.காம் பட்டதாரியான இவர் தன் தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார்.

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் டிப்ளோமா முடித்துள்ள, இவர் பல நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தின் விளைவாக கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

இதனால் வேறு எதாவது வேலை நமக்கு கிடைக்குமா என்று வே தனையில் இருந்த போது தான் ஸ்விக்கியில் வேலைக்கு சேர்ந்துள்ளார். வயது சற்று அதிகம் இருந்தாலும், மன தைரியத்துடன் அவர் திறமையாகப் பேசி நேர்காணலை நிறைவு செய்து வேலையை பெற்றார்.

கடந்த 2019-ஆம் ஆண்டின் இறுதியில் வேலைக்கு சேர்ந்த இவர், இதுவரை 6,838 ஆர்டர்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் ஸ்விக்கியில் அதிக ஆர்டர்களை டெலிவரி செய்த பெண் ஊழியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய மனதுக்கு பிடித்த வேலையை செய்கிறேன். பைக் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். அதனால் எனக்கு வேலை எளிதாக இருக்கிறது.

முதலில் இந்த வேலையை ஏற்றுக்கொள்ள எனது குடும்பத்தினர் சம்மதிப்பார்களா? என்ற சந்தேகம் இருந்தது. அம்மா மிகவும் தயங்கினார். ஆண்களால் செய்யக்கூடிய வேலை அது என்று கூறினார்.

இருப்பினும் ஒப்புக்கொண்டார். இன்று என்னைப்பார்த்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இதில் மறக்க முடியாத அனுபவம் என்றால், ஒரு முறை சரியான மழை பெய்து கொண்டிருந்தது, அப்போது நான் சரியான நேரத்திற்கு சென்று வாடிக்கையாளருக்கு ஆர்டரை கொடுத்தேன்.

அப்போது நான் முழுவதுமாக நினைந்திருந்ததால், அந்த வீட்டில் இருந்த பெண் ஒருவர் என்னிடம் ஒரு டவலை கொடுத்ததுடன், சூடாக டீ வேண்டுமா என்று கேட்டார். அன்றைய நாள் எனக்கு மிகவும் திருப்திகரமாக, மகிழ்ச்சியாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளார்.