கரூரில் திருமணம் செய்ய மறுத்ததால் காதலி வீட்டு முன்பு கத்தியால் குத்தி தற்கொலக்கு முயன்ற இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். டயர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
முகநூல் மூலமாக நிலக்கோட்டையைச் சேர்ந்த எம்,காம் பட்டதாரி பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. 3 ஆண்டுகள் தொடர்ந்த காதலை சுரேஷ்குமார் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
எனவே முறைப்படி அப்பெண்ணின் வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளார். ஆனால் இருவரும் வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர் எனவே பெண்ணின் பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்துள்ளனர்.
காதலியை மீண்டும் தேடி நிலக்கோட்டைக்கு சென்ற சுரேஷ்குமார் காதலியை காணவேண்டும் என அழைத்துள்ளார். ஆனால் அதற்கு பெண்ணின் பெற்றோர்கள் மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் குமார் தான் கொண்டு வந்த கத்தியை எடுத்து வயிற்றில் மூன்று முறை குத்திக்கொண்டுள்ளார்.நடப்பதை பார்த்த பெண்ணின் பெற்றோர்கள் சுரோஷை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
