பைக்கில் இருந்தவர்கள் கார் மோ தி தூ க்கி வீசப்பட்ட காட்சி : அ தி ர வைத்த ச ம் ப வ ம்!!

325

கோவில்பட்டி……….

கோவில்பட்டி அருகே முன்னால் சென்ற பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி சேர்ந்தவர் அய்யாதுரை, இவர் தனது உறவினர் பெண் பழனி செல்வி என்பவரை முடுக்கலான்குளத்தில் கொண்டு விடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார்.

இளையரசனேந்தல் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சிவகாசியிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரு கார் பின்னால் வந்து கொண்டிருந்தது. காரை தூத்துக்குடியை சேர்ந்த பெருமாள் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

வேகமாக வந்து கொண்டிருந்த கார் திடீரென நிலைதடுமாறி முன்னால் சென்றுகொண்டிருந்த பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அய்யாதுரை, பழனி செல்வி இருவரும் காயமடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து நடைபெற்ற சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி உள்ளது.

கோவில்பட்டி, சாலை விபத்து, சிசிடிவி காட்சி, தூத்துக்குடி, பைக் மீது கார் மோதி விபத்து