மகனை பறிகொடுத்துட்டேனே : மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தை மரணம்!!

746

மகனை பறிகொடுத்துட்டேனே

மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வலசுப்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன்-பாப்பம்மாள் தம்பதியினர்.

கட்டிடத் தொழிலாளியான மாரியப்பனுக்கு, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். இதில் இளைய மகனான திருப்பதிக்கு திருமணம் ஆகவில்லை. திருப்பதிக்கு உடல்நிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பதி இறந்துவிட்ட தகவலை அறிந்த அவரின் தந்தை மாரியப்பன் ஆசையா வளர்த்த மகனை பறிகொடுத்துட்டேனே!. எனக் கூறி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மாரியப்பனின் உயிர் பிரிந்தது.

இருவரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டன.