மகள் இறந்த சோகம் தாளாமல் உயிரிழந்த தந்தை!!

974

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்டு இறந்த மகளின் துக்கம் தாளாமல், நீண்ட நாட்களாக தனிமையில் போராடிய தந்தை தற்போது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Lanarkshire பகுதியை சேர்ந்த குத்துசண்டை வீரர் Jon Bothwell (37). இவர் தன்னுடைய மகள் Paige Doherty (15) மீதி அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

மகளுக்கு 2 வயது நடக்கும் போதே தன்னுடைய மனைவி Pamela Munro-வால் விவாகரத்து செய்யப்பட்டு தனித்து விடப்பட்டார். இதனையடுத்து Pamela, Andy Munro என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.

பிரிந்து இருந்தாலும் Jon அடிக்கடி தன்னுடைய மகளை சந்திக்கும் வழக்கத்தினை கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு John Leathem (34) என்ற குழந்தை கொலையாளியால், 15 வயதான Paige கொடூரமாக 61 முறை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

அன்றிலிருந்தே சோகமாக யாருடனும் பேசாமல் இருந்து வந்த Jon அதிகமாக கனவுகள் காண ஆரம்பித்துள்ளார். அந்த கனவுகளில் மகள் தன்னுடைய படுக்கைக்கு கீழே இருப்பதை போலவும், தன்னையும் அங்கு அழைப்பதை போலவும் கனவு கண்டுள்ளார்.

இதனால் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு சுயநினைவின்றி அறையில் கிடந்த Jon-ஐ மீட்டு, கடந்த 25-ம் திகதியன்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு கோமா நிலைக்கு சென்ற Jon, அடுத்த சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

இந்த சோக சம்பவம் குறித்து அவருடைய தாய் Bothwell (77) கூறுகையில், மகள் கொலை செய்யப்பட்டதிலிருந்து அவன் நொறுங்கிய ஒரு இதயத்துடன் வாழ்ந்து வந்தான். மகளின் இறுதிச் சடங்கில் கூட, யாரோ ஒருவன் போல அவன் தனித்து விடப்பட்டிருந்தான் என வேதனை தெரிவித்துள்ளார்.