மசாலா பொருட்களில் கலக்கப்பட்ட கழுதை சாணம் – சோதனையின் போது அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்-வசமாக சிக்கிய உரிமையாளர்…!

428

உத்தர பிரதேச……

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள நவிப்பூர் பகுதியில் மசாலாப்பொருட்கள் உற்பத்தி ஆலையை நடத்தி வருபவர் அனுப் வர்ஷ்னே.இந்த ஆலையில் மிளகாய்த் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவரின் ஆலையில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களுக்ளில் கலப்படம் உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு திடீரென காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த ஆலையில் மிளகாய்த் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதுடன் அவற்றில் கழுதைச் சாணம், செயற்கை நிறங்கள், வைக்கோல் மற்றும் அமிலங்கள் உட்பட பல போலிப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதையும் கண்டறிந்தனர்.

அத்துடன் உள்ளூர் தயாரிப்புகளில் கலப்படம் செய்யப்பட்டதையும் கண்டறிந்தனர். உடனடியாக உரிமையாளரை கைது செய்ததுடன் அழைக்கும் சீல் வைக்கப்பட்டது.

மேலும் அங்கிருந்த 27 மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அத்துடன் அங்கிருந்து 300 கிலோ போலி மசாலாப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.