மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை.. மாடியில் தூக்கி வீசி கொன்ற பல் மருத்துவர் : வெளியான பகீர் வீடியோ!!

1270

பெங்களூர்…

பெங்களூர், சிலிகான் நகரில் மன வளர்ச்சி குன்றிய 5 வயது மகளை வீட்டின் மேல் மாடியில் இருந்து பெற்ற தாயே தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சி சிசிடிவி கேராவில் பதிவாகியுள்ளது. குழந்தையை தூக்கி வீசிய பின்னர் தானும் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தாய் சுஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

மன வளர்ச்சி குன்றிய தனது 5 வயது மகளான தீப்தியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில் நிலையத்தில் அனாதையாக விட்டுச் சென்றுள்ளார் தாய் சுஷ்மா. ஆனால், விஷயமறிந்த தந்தை, அங்கும் இங்கும் தேடி, இறுதியில் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

தாய் சுஷ்மா பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். குழந்தை மன வளர்ச்சி இன்றி பிறந்துவிட்டதே என்று நீண்ட நாட்கள் மன வருத்தத்தில் தாய் சுஷ்மா இருந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பங்கி ராம் நகரில் உள்ள அத்வித் குடியிருப்பின் நானகாவது மாடியில் இருந்து குழந்தையை தூக்கி வீசிவிட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் ஓடி வந்து அவரை காப்பாற்றி உள்ளனர். சம்பங்கி ராம்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுஷ்மாவை கைது செய்தனர்.