மதுரை…..

மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடல் கருகிய நிலையில் பலத்த தீ காயத்துடன் போலீசார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி நடத்தை சரியில்லை என பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும்,

விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றும் தனக்கு எந்த வித நியாயமும் கிடைக்க வில்லை என்றும் கூறி ஆட்சியர் அலுவலகம் வந்து அங்கிருந்தவர்களிடம் புலம்பியுள்ளார்.

மேலும், தனது மகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறி திடீரென அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அவர் உடலில் தீ வைத்து கொண்டு அங்கிருந்து ஓடி அருகில் உள்ள புல் வெளியில் விழுந்து புரண்டதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் பிறகு அங்கு வந்த ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்து ராஜேந்திரனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.குடும்ப பிரச்சனைக்காக நபர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.