மனைவியின் கழுத்தை அறுத்து கொடூர கொலை : கணவனின் வெறிச்செயல்!!

645

கணவனின் வெறிச்செயல்

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மரவபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். கூலித் தொழிலாளியான இவர், தனது மனைவி துளசிமணியின் நடத்தையில் சந்தேகமடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், செந்தில்குமார் மீண்டும் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், காய்கறி நறுக்கும் கத்தியால் துளசிமணியின் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து செந்தில்குமார் தலைமறைவாகியுள்ளார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார், செந்தில்குமாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.