மனைவியின் கூடா நட்பை கண்டுபிடித்த கணவனுக்கு நேர்ந்த கதி : குழந்தைகள் அளித்த பகீர் வாக்குமூலம்!!

942

கணவனுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் கணவனுக்கு தெரிந்துவிடதால், காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரத்தை அடுத்த போத்தங்கோட்டைச் சேர்ந்தவர் வினோத். 35 வயதான இவருக்கு ராகி(30) என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 12-ஆம் திகதி, வினோத், மனைவி ராகி மற்றும் குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பினர்.

வீடு திரும்பிய வினோத் சிறிது நேரத்தில், வீட்டின் முன்பு மயங்கி கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் மனைவி ராகி, கணவர் தற்கொலை செய்து கொண்டதாக, அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையில் வினோத், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனால் பொலிசார் வினோத்தின் மனைவியிடம் விசாரணை நடத்தினர். அவரது வீட்டிற்கு வந்து சென்றவர்கள் யார்? யார்? எனவும் விசாரித்தனர்.

ஆனால் அதில் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. குழம்பி போயிருந்த பொலிசார், வினோத்தின் குழந்தைகளை அழைத்து தனித்தனியாக விசாரித்த போது, அவர்களது வீட்டிற்கு உறவினர் மனோஜ் (39) அடிக்கடி வந்து சென்ற விபரம் தெரிய வந்தது.

சம்பவத்தன்று தந்தையை தாயார் பிடித்துக் கொள்ள மனோஜ், அவரது கழுத்தை அறுத்ததாக குழந்தைகள் தெரிவித்தனர். குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து பொலிசார், மனோஜை பிடித்தனர். அவர், வினோத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

கொலைக்கான காரணம் குறித்து மனோஜ் அளித்த வாக்குமூலத்தில், வினோத், உறவினர் என்பதால் அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்றேன். இதில், அவரது மனைவி ராகியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் வீட்டில் வினோத் இல்லாத நேரத்தில் நாங்கள் உல்லாசமாக இருப்போம். இது வினோத்திற்கு தெரிந்து விட்டது. அவர், எங்களை கண்டித்தார். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்தோம். கொலையை மறைக்க அவர், தற்கொலை செய்ததாக நாடகமாடினோம். ஆனால் பொலிசார் கண்டுபிடித்துவிட்டனர்.

மனோஜ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினோத்தின் மனைவி ராகி கைது செய்யப்பட்டார். கைதான ராகியை பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவருக்கு எதிராக அவரின் குழந்தைகள் அளித்த வாக்குமூலத்தையும் பொலிசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.