மறுப்பு தெரிவித்த கணவன்… புதுப்பெண் எடுத்த சோக முடிவு!!

588

புதுப்பெண் எடுத்த சோக முடிவு

நாமக்கல் மாவட்டத்தில் திருமணமான புதுப்பெண் ஒருவர் பொங்கல் நாளன்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிஷ்வரன் – பரமேஷ்வரி ஆகிய இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தாய் வீட்டிற்குச் செல்ல, தனது கணவரிடம் பரமேஷ்வரி அனுமதி கேட்டுள்ளார்.

இதற்கு கணவன் மறுப்பு தெரிவித்ததால், விரக்தியடைந்த பரமேஷ்வரி வீட்டில் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஆனால், கணவர் தான் பரமேஷ்வரியை கொலை செய்து விட்டதாகவும், எனவே அவரை கைது செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி, பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.