
தென் ஆப்பிரிக்காவில் பாடசாலை மலக் குழிக்குள் விழுந்து ப ரிதாபமாக ம ரணமடைந்த 5 வயது சிறுவனின் குடும்பத்தாருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் வடகிழக்கு மாகாணமான லிம்போபோவில் நாட்டை உ லுக்கிய இச்சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்தேறியது.
இந்த வழக்கில் தென் ஆப்பிரிக்காவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு 75,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
லிம்போபோ பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 5 வயது சிறுவன் மைக்கேல் கோமாப் அங்குள்ள கழிவறையின் மலக்குழியில் த வறி வி ழுந்துள்ளான்.
சுமார் 4 மணி நேரம் அந்த மலக்குழிக்குள் உ யிருக்கு போ ராடிய அந்த சிறுவன், அதிலேயே உ யிரை வி ட்டுள்ளான்.
சிறுவனின் ச டலத்தை மீட்கும் போது, அவனது ஒரு கை மட்டுமே அந்த மலக்குழியின் வெளியே நீட்டியபடி இருந்துள்ளது.
இந்த வழக்கில் புதனன்று தீர்ப்பளித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், சிறுவனின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தாரின் எதிர்கால மருத்துவ செலவு மொத்தமும் கல்வித்துறை ஏற்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் புறநகர் பகுதிகளில் தற்போதும் திறந்தவெளி கழிவறையானது பொதுமக்களால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டும் சிறுவன் ஒருவன் கழிவறை மலக்குழிக்குள் தவறி வி ழுந்து இ றந்த நிலையில்,
இரண்டு ஆண்டுகளுக்குள் பாடசாலைகளில் பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளி கழிவறைகளை அப்புறப்படுத்த ஜனாதிபதி சிரில் ரமபோசா உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.