மாணவிக்கு 10 பேரால் நடந்த பாலியல் வன்கொடுமை : குற்றவாளிகளின் புகைப்படம் வெளியானது!!

681

பாலியல் வன்கொடுமை

அரியானா மாநிலத்தில் படிப்பில் படுகெட்டிக்காரியான 19 வயது மாணவியை 10 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 3 குற்றவாளிகளின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான அந்தப் பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம் விருது பெற்றவர் ஆவார்.

அவர் கடந்த 12-ஆம் தேதி சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் அவரை ஒரு காரில் கடத்திச் சென்றனர்.

அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் 3, தன்னை 8 முதல் 10 பேர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கலாம் என கூறி உள்ளார்.

இதில் முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் என தெரியவந்து உள்ளது. பங்கஜ் என்ற ராணுவ வீரரின் புகைப்படம் மற்றும் சம்பவத்தில் மணீஷ் மற்றும் நிஷ்ஷூ என்ற இரு வாலிபர்களை பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்கள் 3 பேரின் புகைப்படம் பொலிசாரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது

இதனிடையே அரியானா மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் குறித்து தகவல் தருவோருக்கு ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.