மாதவிடாய் இருந்ததால் பள்ளி மாணவிக்கு ஆசிரியரால் நேர்ந்த துயரம்!!

429

மகாராஷ்டிரா…

மகாராஷ்டிரா மாநிலம் தேவ்கான் பகுதியில் உள்ள அரசுப் பெண்கள் ஆசிரமப்பள்ளியில் மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, தேவாரே என்ற ஆசிரியர், மாதவிடாய் ஏற்பட்டுள்ள மாணவிகள் மரம் நடக்கூடாது எனக்கூறியுள்ளார்.

தொடர்ந்து மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஒரு மாணவியை, நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.

இதுதொடர்பாக மாணவி கூறுகையில், “எனக்கு மாதவிடாய் காலம் என்பதால், என்னை மரம் நட அனுமதிக்கவில்லை.

ஆசிரியர் கூறுவதை மீறி நான் நிகழ்ச்சியில் கலந்துகொண்டால், மதிப்பெண்களைக் குறைத்துவிடுவேன் என மிரட்டினார்” என்று தெரிவித்தார். ஆசிரியரே, மாணவியிடம் இவ்வாறு நடந்துகொண்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.