மார்பகத்தில் பச்சை குத்திய 16 வயது இளம் கர்ப்பிணி பெண்ணின் பரிதாப நிலை : எச்சரிக்கை!!

592

இளம் கர்ப்பிணி

கொலம்பியாவில் 16 வயது இளம் பெண் ஒருவர் மார்பகத்தில் பச்சை குத்தியதால், அதன் பாதிப்பு காரணமாக தன்னுடைய குழந்தையை இழந்து தவிக்கிறார். கொலாம்பியாவின் Casanare மாகாணத்தை சேர்ந்தவர் Luisa Fernanda(16). இவர் ஒரு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வலது மார்பகத்தில் பச்சை குத்தியுள்ளார்.

பச்சை குத்தியதன் காரணமாக இவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த நோய் தொற்று அவரின் தண்டுவடம் வரை பாதித்துள்ளது. இதனால் சிகிச்சைகள் மேற்கொண்ட அவர், அதிக மாத்திரைகள் சாப்பிட்டுள்ளார். இதனால் அவரின் கரு சிதைவுற்றது. அதுமட்டுமின்றி நடக்க முடியாமல் வீல் சேரில் உட்கார்ந்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், நான் ஒரு வருடத்திற்கு முன்பு பச்சை குத்தி கொண்டேன். இதனால் நோய் தொற்று ஏற்பட்டது. அது என்னுடைய தண்டுவடத்தை பாதித்தது, நடக்க முடியாமல் தவிக்கிறேன்.

தற்போது உள்ள இளம் பட்டாளங்கள் பச்சை குத்துவதில் ஆர்வம் அதிகம் காட்டுகின்றனர். ஆனால் பச்சை குத்துவது எவ்வளவு ஆபத்து என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

என்னால் நடக்க முடியவில்லை என்ற போது, என் அம்மா எனக்கு பெரும் உதவியாக இருக்கிறார். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஒரு வீல் சேரில் நான் வெளியே வந்த போது, என் அம்மா உறுதியாக இல்லை, அதைத் தவிர கொஞ்சம் வெட்கமாகவும் இருக்கிறது.

ஏனெனில் தெருவில் செல்லும் போது அனைவரும் நம்மை பார்க்கின்றனர், இதனால் வீட்டில் அடைந்திருந்தேன். அதன் பின்பு வீட்டில் இருப்பது நல்லது இல்லை என்பதை உணர்ந்து வெளியில் வர ஆரம்பித்தேன் என்று கூறியுள்ளார்.