கொலை செய்த கணவன்

சென்னையில் காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னைல் ஆட்டோ ஓட்டுநராகவும், ஜோசியம் தொழிலும் பார்த்து வரும் மகாராஜன் (வயது 25) கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக நித்தியலட்சுமி என்கிற கருத்தம்மாவை (23) காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கார்த்திக் (4) என்ற மகன் உள்ளான்.

திருமணம் முடிந்ததிலிருந்தே கணவன் – மனைவிக்கு இடையில் குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கிருந்து குடிபெயர்ந்து அண்ணாநகர் பகுதிக்கு வந்தனர்.

அங்கு மீண்டும் தம்பதியிருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக்கொண்டு கருத்தம்மா, தன்னுடைய தாயின் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கணவர் மீது பொலிஸ் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இருவருக்கும் அறிவுரை வழங்கி ஒன்றாக சேர்ந்து வாழுமாறு பொலிஸார் கூறி அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மீண்டும் கணவன்- மனைவிக்கு இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த மகராஜன் திடீரென அங்கிருந்த கத்தியை கொண்டு கருத்தம்மாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்த கருத்தம்மாவை பார்த்துவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், கருத்தம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய மகாராஜனை தீவிரமாக தேடி வருகின்றனர்.