மாலைதீவில் நீச்சல் உடையில் உலாவந்த பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

910

பிரித்தானிய பெண்

இஸ்லாமிய நாடான மாலைதீவில் நீச்சல் உடையில் ஹாயாக உலாவந்த பிரித்தானிய பெண் ஒருவரை குண்டுக்கட்டாக தூக்கிப்போய் கைது செய்துள்ளனர் பொலிசார்.

இலங்கையிலிருந்து 400 மைல்கள் தென் மேற்கே அமைந்துள்ளது 1,200 சிறு தீவுகளால் ஆன நாடாகிய மாலத்தீவு. அவற்றில் ஒன்றாகிய Maafushi என்னும் தீவில், பிரித்தானிய பெண் ஒருவர் நீச்சல் உடையில் நடமாடியிருக்கிறார்.

சுற்றுலாப்பயணிகள் தாங்கள் தங்கியிருக்கும் ரிசார்ட்டுகளில் நீச்சல் உடையில் நடமாடலாம் என்றாலும், ரிசார்ட்டுகளிலிருந்து தொலைவில் அப்படி நடமாட அவர்களுக்கு அனுமதியில்லை.

பிரித்தானிய அரசும், மாலத்தீவுகளுக்கு செல்லும்போது, உள்ளூர் உடை கட்டுப்பாடுகளை மதித்து நடக்குமாறு தனது குடிமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மாலத்தீவுகள் சுற்றுலாத்தலமாக இருந்தாலும், அது ஒரு இஸ்லாமிய நடு என்பதால் அங்கு சுற்றுலா செல்வோர் உள்ளூர் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள், சட்டதிட்டங்கள் மற்றும் மதங்களை எப்போடும் மதித்து நடக்கவேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீச்சல் உடையில் நடமாடிய அந்த பிரித்தானியப் பெண், அநாகரீகமான வகையில் உடலை வெளிக்காட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், மூன்று பேர் அந்த பெண்ணிற்கு கைவிலங்கு மாட்ட முயல்வதையும்,ஒருவர் டவல் ஒன்றினால் அந்த பெண்ணின் உடலை மூட முயல்வதையும் காணலாம்.

அந்த பெண் முரண்டு பிடித்தவாறு. நீங்கள் என்னை பா லியல் ரீ தியாக து ன்புறுத் துகிறீர்கள் என ச த்தமிடுவதையும் அந்த வீடியோவில் காணமுடிகிறது.

இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் கமிஷனராகிய முகமது ஹமீது, அந்த பெண் சுற்றுலாப்பயணியை பொலிசார் நடத்திய விதம் மோசமானதாக உள்ளது, அதற்காக சுற்றுலாப்பயணிகளிடமும், பொதுமக்களிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பொலிசாருக்கு எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்க இருப்பதோடு, விசாரணை ஒன்றையும் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.