மீண்டும் மாற்றுத்திறனாளியாக களமிறங்கும் நயன்தாரா: படத்தின் பெயர் தெரியுமா?

2010

மலையாள திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நடிகை நயந்தாரா லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

அதற்கு காரணமே இவர் வித்தியாசமான கதாப்பாத்திரங்களை தேடிப் பிடித்து நடிப்பது தான். அதிலும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படமாக இருந்தாலும் கூட அதில் தனது வேடத்திற்கும் கதைக்கும் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிக்கக் கூடியவர்.

இந்நிலையில், நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்திருந்தார்.

இதை அடுத்து தற்போது கோலமாவு கோகிலா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா வாய் பேச முடியாத பெண்ணாக மீண்டும் மாற்றுத்திறனாளியை போன்று நடிக்கின்றாராம்.