ரஷ்யாவில் போதைக்கு அடிமையான தந்தை தொடர்ந்து மூன்று மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் மூவரும் சேர்ந்து தந்தையை கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்கோவை சேர்ந்தவர் மைக்கேல் கச்சைட்ரான், இவருக்கு கிரிஸ்டினா (19), ஏஞ்சலினா (18) மற்றும் மரியா என்ற மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ஹெராயின் போதை பழக்கத்துக்கு அடிமையான மைக்கேல் மனைவியையும் மகனையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளார்.
இதையடுத்து தனது மூன்று மகள்களுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மைக்கேல் அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
தந்தையின் செயலை வெகுகாலம் பொறுத்து கொண்ட மூவரும் இனியும் பொறுக்க இயலாது என எண்ணி அவரை கொலை செய்ய முடிவெடுத்தனர்.
இதையடுத்து கிரிஸ்டினா, மைக்கேலை கத்தியால் முதலில் குத்தியுள்ளார். பின்னர் ஏஞ்சலினா மற்றும் மரியாவும் கத்தியால் அவரை குத்த மைக்கேல் துடிதுடித்து இறந்தார்.
சம்பவத்தை தொடர்ந்து பொலிசார் மூன்று சகோதரிகளையும் கைது செய்த நிலையில் தந்தையால் அனுபவித்த துன்பங்களை மூவரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மூவருக்கும் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும் என தெரியவந்துள்ளது.