மேகன் மெர்க்கலின் முன்னாள் கணவர் டிரிவோர் எங்கில்சனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக அவரே தெரிவித்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல் திருமணம் இரு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
மெர்க்கலுக்கு ஹரி இரண்டாவது கணவராவார். அவர் ஏற்கனவே டிரிவோர் எங்கில்சன் என்ற திரைப்பட தயாரிப்பாளரை 2011-ல் மணந்து 2014-ல் விவாகரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில் தனது காதலியான ட்ரேசி குர்லாண்டுடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக எங்கில்சன் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
எங்கில்சனும், ட்ரேசியும் குறைந்தது ஒரு ஆண்டு காலமாவது காதலித்து வருவதாக நம்பப்படுகிறது.இருவரின் திருமண திகதி குறித்த தகவல் வெளியாகவில்லை.