அதிர்ச்சி செயல்

இந்தியாவில் மனைவி தொடர்ந்து மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததால், அவர் மீது சந்தேகமடைந்த கணவன், ஆத்திரத்தில் சுத்தியலால் தாக்கி கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் Wyra நகரின் Satram Bazaar பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவருக்கும் பத்மா(30) என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக இந்த தம்பதிகளுக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு பத்மா தன்னுடைய தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன்பு கிருஷ்ணா மனைவியான பத்மாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பத்மா தொடர்ந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கிருஷ்ணா அது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மனைவிக்கு வேறு யாருடனாவது தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில், அருகிலிருந்த சுத்தியலை எடுத்து தாக்கியுள்ளார். இதனால் பத்மா சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.

அதன் பின் கிருஷ்ணா விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த தகவலை அறிந்து விரைந்து வந்த பொலிசார் கிருஷ்ணாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.