ரஜினிகாந்த் இன்று சூப்பர் ஸ்டாராக கொடிக்கட்டி பறக்கின்றார். ஆனால், அவர் இந்த உயரத்தை அடைய பல கஷ்டங்களை கடந்து வந்திருப்பார்.அவரின் திரைப்பயணத்தின் முன்னேற்றத்திற்கு பல இயக்குனர்கள் படியாக இருந்துள்ளனர்.
அந்த வகையில் ஆர்.தியாகராஜன் என்பவர் ரஜினிக்கு தாய் மீது சத்தியம், தாய்வீடு, அன்புக்கு நான் அடிமை, ரங்கா என பல ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்த இயக்குனர்.
இவர் இன்று சென்னையில் உடல்நலம் முடியாமல் மரணமடைந்தார், இச்செய்தி திரையுலகத்தினர் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.