மும்பை…
மும்பையின் பரபரப்பான ரயில் நிலையங்களும் ஒன்று பைகுல்லாவில் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அங்கு பயணிகள் புறநகர் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அந்த ரயில் நிலையத்தை நோக்கி ஒரு ரயில் வந்துகொண்டிருந்துள்ளது.
அப்போது திடீர் என ஒரு பெண் தண்டவாளத்தில் இறங்கி வந்துகொண்டிருந்த ரயிலை நோக்கி வேகமாக சென்றுள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்ள செல்கிறார் என்பதை அறிந்த பயணிகள் உடனடியாக ரயிலை நிறுத்துமாறு சைகை செய்ததோடு, கூச்சல் போட்டுள்ளனர்.
ஒரு பெண் ரயிலை நோக்கி வருவதையும், பயணிகள் சைகை காட்டுவதையும் பார்த்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலின் வேகத்தை குறைந்து அதை நிறுத்தியுள்ளார்.
அதே தருணத்தில் அங்கு விரைந்து வந்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலரும் தாண்டவாளத்தில் இருந்து அந்த பெண்ணை வெளியே தள்ளி அவரை காப்பாற்றினார்.
இந்த சம்பவத்தால் அந்த ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் யார் என்பது குறித்த தகவலை ரயில்வே காவல்துறை வெளியிடவில்லை.
Alert motorman, RPF personnel foil woman’s suicide attempt at Byculla stationhttps://t.co/cZvykbbqQE pic.twitter.com/94M7IoLuhF
— TOI Mumbai (@TOIMumbai) August 28, 2022