கதறியபடி ஓடிவந்த அக்கா

கோவை மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் சிக்கி, 2 வயது மகனுடன் கர்ப்பிணி தாய் உடல்சிதறி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ரத்தினபுரி தில்லைநகர் ரயில்வேகேட்டை கடக்க முயன்ற போது, கர்ப்பிணி பெண்ணும், 2 வயது குழந்தையும் விபத்துக்குள்ளாகி உடல் சிதறி கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், உடல்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த செல்போனை கைப்பற்றி அதிலிருந்து உறவினர் எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவம் அறிந்து கதறியபடியே ஓடிவந்த அவருடைய சகோதரி, சம்மந்தப்பட்ட பெண் குறித்த தகவல்களை பொலிஸாருக்கு தெரிவித்தார்.

கோவை சின்னத்தடாகத்தை சேர்ந்த மகேஷ்வரி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக புதூரை சேர்ந்த தனபால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களாகவே தம்பதியினர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் கோபித்துக்கொண்ட மகேஸ்வரி, வயிற்றில் இருக்கும் 6 மாத கருவுடன் அம்மாவின் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையும் கணவன், மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக்கொண்ட மகேஸ்வரி, பையில் துணிகளை அள்ளிப்போட்டிக் கொண்டு, கையில் தன்னுடைய 2 வயது குழந்தையை பிடித்தவாரே வெளியில் புறப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மகேஸ்வரி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.