இளைஞன் செய்த செயல்

இந்தியாவில் பெண் அதிகாரிக்கு இளைஞர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு அந்த இளைஞர் சொன்ன காரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த 23 வயது பெண் அதிகாரி ஒருவர் கடந்த வியாழக்கிழமை இரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் வந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் திடீரென பைக்கில் இருந்து இறங்கி அவருக்கு முத்தம் கொடுத்து விட்டு ஓடினார்.

அந்த நேரத்தில் தெருவில் ஆளில்லாததால் அந்த பெண் கூச்சல் போட்டும் உதவிக்கு யாரும் வரவில்லை. இது குறித்து அந்த பெண் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்ஸ் அப் வழியாக தகவல் தெரிவித்ததால், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த இளைஞரை பொலிசார் கண்டுபிடித்தனர்.

அதன் பின் அவனை பிடித்து விசாரித்த போது, அந்த இளைஞனின் பெயர் ரிஷி என்பதும், அவர் மெட்டத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

அன்றிரவு இவரும், நண்பரும் தண்ணியடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது அந்த ரிஷியின் நண்பர் இந்த பெண்ணைக்காட்டி அவருக்கு உன்னால் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முடியுமா? என சவால் விட, இதனால் பந்தயத்தில் ஜெயிப்பதற்காக ரிஷி பெண் அதிகாரிக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.

பந்தயத்தில் ஜெயித்த ரிஷி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற குற்றங்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும்,அப்போது தான் இதுபோன்ற குற்றங்கள் உடனடியாக தடுக்கப்படும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.