
தமிழகத்தில் சில நாட்களுக்கு முன் பெண்ணுக்கு ஆண் ஒருவர் முத்தமிடும் காட்சி வைரலாக பரவியது. இது தொடர்பில் ஜீயபுரம் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தினார்.
இதற்கிடையே பெண் போலீசை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் 3 பிரிவுகளின் கீழ் எஸ்.எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை சுபோலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் தற்போது பாலசுப்பிரமணியன் முன்ஜாமீன் கேட்டு தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருக்கு சொந்த ஊர் திருமலை அருகே உள்ள கொட்டாபபு என்பதும், மனைவி பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் அதே ஊரை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது, அந்த பெண்ணையும் கடந்த மூன்று நாட்களாக காணவில்லை என உறவினர்கள் தேடி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணுடன் ராஜபாளையத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்துள்ளது.