வயிற்று வலியால் துடித்த சிறுமி

தமிழகத்தில் 17 வயது சிறுமி வயிற்று வலியால் துடித்ததால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததோடு குழந்தையும் பிறந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி வயிற்று வலி சிகிச்சைக்காக வந்திருந்தார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அது வயிறு வலி இல்லை, பிரசவ வலி என்பது தெரியவந்தது.

இதையடுத்து நடந்த சிகிச்சையை அடுத்து, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இது குறித்து தகவலறிந்த பொலிசார் சிறுமிடம் விசாரித்தனர். விசாரணையில் சிறுமி 11ம் வகுப்பு படிக்கும் போது, உடன் படிக்கும் மாணவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

2 பேரும் காதலித்த நிலையில், அந்த மாணவன் 12-ம் வகுப்பு படிக்கும்போதே பாதியிலேயே படிப்பை நிறுத்தியுள்ளான். இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தில் கர்ப்பம் அடைந்து இருக்கிறாள் சிறுமி. ஆனால் இதை பற்றி வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை.

இந்த சூழலில் தான் வயிற்று வலி என மருத்துவமனைக்கு அவர் வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுமிக்கு பிறந்த குழந்தை தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறுமிக்கு உரிய வயது வந்த பின்னர் குழந்தை அவரிடமே ஒப்படைக்கப்படும் என தெரியவந்துள்ளது.