வலிமை அப்டேட்: ஈஸ்வரமூர்த்தி IPS ஆக ‘தல’ !!

388

அஜித் குமார்….

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜி பிலிம்சிட்டி ஹைதராபாத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று முதல் அஜித்குமார் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார.

இதில் முதன்மையாக பைக் ரேஸிங் மற்றும் சேசிங் போன்ற காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து படம் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது தல அஜித் குமாரின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே RX100 என்ற திரைப்படத்தின் நாயகன் கார்த்திகேயா அஜித்திற்கு வலிமையான ஒரு வில்லனாக நடிக்கும் பட்சத்தில் ஒரு பெண் எதிர்மறை கதாபாத்திரமும் இத்திரைப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ், வலிமை ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகின்றன.