இலங்கை மணித்தீவின் ஆறாவது ஈஸ்வர தலமாகவும் இலங்கையின் இருதயம் போல் விளங்கும் வன்னித்தலைநகரின் கண்ணே வேண்டுவார் வேண்டுவதை ஈந்தருள அன்னையுடன் அருள்பாலித்துக் கொண்டு இருக்கும் அகிலாண்டேசுரப்பெருமானுக்கு
நிகழும் விகாரி வருடம் மாசித் திங்கள் 09ம் நாள் (21.02.2020) வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிமுதல் விசேட அபிஷேக ஆராதனைகளும் அர்ச்சனைகளும் நடைபெற்று மறுநாள் அதிகாலை 5.30 மணியளவில் வசந்த மண்டபபூசையும் தீர்த்தோற்சவமும் நடைபெறுவதுடன் முழு இரவும் சிவநாம வழிபாடு இடம்பெறும்.
காலை 06.00 மணி கும்ப பூசை உருத்திரா அபிஷேகம் – திரு.கதிர்காமத்தம்பி குடும்பம் காலை |07.00 மணி |காலைப் பூசை காலை 10.30 மணி |கும்ப புசை உருத்திரா அபிஷேகம் – க.துரைசிங்கம் குடும்பம் – கோவில்புதுக்குளம்.